கீழ் முதுகுவலி - முன் எச்சரிக்கை அறிகுறிகள் |காரணிகள் | Lower Back Pain - Red flags| causes

கீழ் முதுகு வலி மிகவும் பொதுவான ஒன்று. அதே நேரத்தில் இவ்வகையான கீழ் முதுகு வலிகள் மிகவும் வலி தரக்கூடிய ஒன்றும் கூட.

கீழ் முதுகு வலி திடீரென்றும் தோன்றலாம் அல்லது நாட்பட்ட வலியாகவும் இருக்கலாம். வலி ஒரே இடத்திலிருக்கலாம் அல்லது கால் அல்லது பாதத்திற்கும் பரவலாம். இது உணர்ச்சியின்மை அல்லது முள் குத்துதல் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம்.இவை காலப்போக்கில்சரி அகி விடும்

எனினும் சில வேளைகளில் இந்த முள்ளந்தண்டுநரம்புகள்

எலும்புகளுக்கு இடையில் இடைத்தட்டு வீக்கத்தால் ,

தன்னிச்சையாக வயதானவர்களுக்கு அல்லது விபத்துக்கு பிறகு முதுகெலும்பு உடைவதால்

சீல்கட்டுவதால்

புற்றுநோயால்

இந்த நரம்புகள் அழுத்த படுகின்றன . இவ்வாறு அழுத்தப்படும் பொழுது இடுப்புக்கு கீழ்பல்வேறு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. விரைவாக மருத்துவ சிகிச்சை பெறவில்லை எனில் நிரந்தரமாக இயலாமையை கூட ஏற்படுத்தலாம்.

ஆகவே ,

முதுகு வலியுடன்

கால்கள் வலுவிழத்தல்

முள் குத்துதல் போன்ற அறிகுறி இரு கால்களுக்கும் செல்லுதல்

சிறுநீர் கழிக்க முடியாமல் போவது

மலம் மற்றும் சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமை

பிறப்புறுப்பு அல்லது ஆசனவாயை சுற்றி உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு

முதுகுத்தண்டு நோய்தொற்ராக இருப்பின் கூடவே காய்ச்சல்

போன்ற அறிகுறிகள் முதுகுத்தண்டு நரம்பு அழுத்தத்திற்கான முன் எச்சரிக்கை அறிகுறிகள் இருக்கலாம்.

Recommended Reading >> bit.ly/32kRpzw

Comments